• Mar 29 2023

நடிகை அமலாபாலின் மாஜி கணவருக்கு மட்டும் ஓகே சொன்ன அனுஷ்கா- அப்போ காஷ்மீர் என்றால் வருவாங்களா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை அனுஷ்கா, தமிழில் இரண்டு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். குறிப்பாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடித்த அருந்ததி', 'பாகமதி', போன்ற படங்கள் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

குறிப்பாக இவர் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த 'பாகுபலி', மற்றும் 'பாகுபலி 2' படங்கள் அனுஷ்காவை உலக அளவில் இவரை பிரபலமடைய செய்தது.ஸ்லிம் ஃபிட் நடிகையாக இருந்த இவர், உடல் எடை கூட காரணமாக அமைந்தது 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படம் தான். உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட இந்த படத்திற்காக, அனுஷ்கா தன்னுடைய எடையை 30 கிலோவுக்கு அதிகமாக கூட்டினார். 


பின்னர் ஏற்றிய  எடையை அவரால் குறைக்க முடியாமல் போனது. பாகுபலி படத்தில் இவரை ஒல்லியாக சில ஸ்பெஷல் எபக்ட்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து இந்த சிவராத்திரியை முன்னிட்டு வீட்டில் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற  சிவாலயத்தில் நடந்த பூஜையில் கலந்து கொண்டுள்ளார். இதில் அனுஷ்கா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை கூடி காணப்படும் புகைப்படம் வெளியாகியதால் ரசிகர்பள் அதிர்ச்சியடைந்தனர்.


இப்படியொரு நிலையில் அனுஷ்காவிற்கு அடிக்கடி படவாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றதாம்.இருப்பினும் ஆனால் அவர் யாருடைய படத்திலும் நடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் மட்டும் நடிக்க சம்மதம் தெரிவிததுள்ளாராம்.இதற்கு காரணம் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க காஷ்மீரில் தான் எடுக்கவுள்ளதால் இந்த படத்திற்கு அனுஷ்கா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement