• Apr 20 2024

சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய அனுபமா... தொகையைக் கேட்டு வாயைப் பிளந்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் வெற்றி பெற்ற 'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் தனுஷ் ஜோடியாக 'கொடி', அதர்வா ஜோடியாக 'தள்ளிப்போகாதே' ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். 


இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கில் அனுபமா நடிப்பில் வந்த படங்கள் அனைத்துமே தோல்வி அடைந்து அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வந்தன. 


இந்த நிலையில் இவர் நிகிலிற்கு ஜோடியாக நடித்த 'கார்த்திகேயா-2' படம் வெளியாகி வசூலினை வாரிக் குவித்து உள்ளது. மீண்டும் நிகிலிற்கு ஜோடியாக நடித்த '18 பேஜஸ்' என்ற படமும் வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த இரண்டு படங்களின் வெற்றியால் அனுபமா ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறார். அத்தோடு அவரது மார்க்கெட்டும் எகிறி உள்ளது. இதனால் பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. 


இதையடுத்து இவர் தற்போது சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி இருக்கிறாராம். அந்தவகையில் ஏற்கனவே ரூ.60 லட்சம் வாங்கிய அவர் இப்போது ரூ.1 கோடியே 20 லட்சம் கேட்கிறாராம். தயாரிப்பாளர்களும் அவர் கேட்ட தொகையை கொடுக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement