• Mar 29 2023

திரையுலகில் மற்றுமோர் அதிர்ச்சி.. பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்.. கவலையில் ரசிகர்கள்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாநவாஸ் பிரதான். இவர் நடிகர் சைப் அலி கான் முன்னணி வேடமேற்று நடித்திருந்த 'பாந்தோம்' என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவர் மும்பை தாக்குதல் பயங்கரவாதியான ஹபீஸ் சயீது வேடமேற்று நடித்திருந்தார். இதனால் அந்த சமயத்தில் அவருக்கு பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. 


அதுமட்டுமல்லாது தொடர்ந்து 'எம்.எஸ். தோனி தி அன்டோல்டு ஸ்டோரி (2016), லவ் சுதா (2016), ரேயீஸ்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து உள்ளார். அந்தவகையில் கடைசியாக 'குடா ஹபீஸ்' (2020) என்ற படத்தில் நடித்து இருக்கின்றார். திரைப்படங்களில் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர் மற்றும் ஓ.டி.டி. தளங்களிலும், வலைதள தொடர்களிலும் அவர் நடித்து உள்ளார். அதிலும் குறிப்பாக பிரபல 'மிர்சாப்பூர்' என்ற வலைதள தொடரிலும் அவர் காவல் துறை அதிகாரியாக நடித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு பல படங்களிலும் நடித்து வந்த இவர் தற்போது மரணமடைந்துள்ளார். அதாவது மராட்டியத்தின் மும்பை நகரில் நடந்த விருது வழங்க கூடிய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஷாநவாஸ் பிரதான் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை மற்றவர்களிடம் கூறி விட்டு, உடனே சரிந்து உள்ளார். அத்தோடு சுயநினைவையும் இழந்து உள்ளார். 


இதனையடுத்து உடனடியாக அவரை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடன் இருந்தவர்கள் கொண்டு சென்று உள்ளனர். எனினும், மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். அவருக்கு தற்போது தான் 56 வயது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் நடந்து உள்ளது என கூறப்படுகிறது.


இந்நிலையில் இவரின் இந்தத் திடீர் மரணம் திரையுலகையே உருக்கி உள்ளது. இவரின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement