• Mar 27 2023

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் மற்றுமொரு காதல் சீரியல்- இந்த சீரியல் இப்போ தானே ஆரம்பிச்சது

stella / 2 months ago

Advertisement

Listen News!

மலையாள தொடரான கருதம்மா என்ற தொடரின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் பாரதி கண்ணம்மா. இதில் அருண் மற்றும் ரோஷினி முதலில் சீரியலில் கமிட்டாகி நடிக்க செம ஹிட்டாக ஓடியது.பின் ரோஷினி சில காரணங்களால் தொடரில் இருந்து விலக அவருக்கு பதிலாக வினுஷா நடித்து வருகிறார்.

தற்போது சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக புரோமோ வெளியாகிவிட்டது, எப்படி முடிக்கப்போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். மேலும் பாரதிக்கு பழைய விடயம் எல்லாம் நினைவுக்கு வருமா? அல்லது பாரதி கண்ணம்மாவுக்காக நடிக்கின்றாரா என ரசிகர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.


மேலும் கடந் வாரம் தான் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து மகாநதி மற்றும் சிறகடிக்க ஆசை போன்ற புதிய புதிய சீரியல்கள் ஆரம்பமாகி உள்ளன. இந்த நிலையில் தற்பொழுது விஜய் டிவியில் மற்றுமொரு சீரியல் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சமீபத்தில் புதியதாக தொடங்கப்பட்ட ஈரமான ரோஜாவே 2 முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இப்போது தான் கதைக்களத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது, எனவே இது முழுக்க முழுக்க வதந்தி என சீரியல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement