• Mar 28 2024

ரஞ்சிதமே பாடல் குறித்த மற்றுமோர் புதிய அப்டேட்... மகிழ்ச்சியின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இதுவரை சுமார் 65 படங்களில் நடித்து முடித்துள்ள இவர் நடிப்பில் தற்போது 66 ஆவது படமாக வாரிசு படம் உருவாகி வருகின்றது. இப்படமானது வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. 

இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் யாவும் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. மேலும் வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சி உள்ள நிலையில், தற்போதே அப்படம் குறித்த அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த வண்ணம் இருக்கின்றன.


அதாவது கடந்த மாதம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. அதேபோல் நவம்பர் 3-ஆம்தேதி மாலை இப்படத்தின் முதல் பாடல் புரோமோ வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாது அந்த பாடல் நவம்பர் 5-ஆம் தேதியான இன்று வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ரஞ்சிதமே என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


புரோமோவில் இடம்பெற்ற இரண்டு வரிகளைக் கேட்டவுடன் பிடிக்கும் வகையில் இருந்ததால் பாடலும் நிச்சயம் ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே உள்ளது. இந்நிலையில், ரஞ்சிதமே பாடல் எப்போது ரிலீசாகும் என்பது குறித்த அப்டேட்டை வாரிசு படக்குழு தற்போது ஒரு புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்தவகையில் ரஞ்சிதமே பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமன்பிரமாதமாக இசையமைத்துள்ள இப்பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார். அதுமட்டுமல்லாது தமன் தனக்கு இன்றுதான் தீபாவளி எனவும் கூறி இருக்கின்றார். 


அத்தோடு விஜய் ராஷ்மிகா படங்கள் இடம்பெற்றுள்ள ரொமாண்டிக் போஸ்டரும் வெளியிடப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் பெரிதும் உற்சாகமடைந்துள்ளனர். போட்டோவிலேயே இருவரது கெமிஸ்ட்ரி வேறலெவலில் இருப்பதால் நேரில் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் எனக் கூறி பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement