• Apr 20 2024

முடிவுக்கு வரவுள்ள 'Mr and Mrs சின்னத்திரை'... பிரமாண்டமாக தொடங்கவுள்ள மற்றுமோர் புதிய நிகழ்ச்சி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

எத்தனை எத்தனையோ தொலைக்காட்சி சேனல்கள் இருந்தாலும் மக்கள் அதிகம் விரும்பிப்பார்ப்பது விஜய் டிவி தான். இதற்கான காரணம் இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தான். அவ்வாறான விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது 'Mr and Mrs சின்னத்திரை'.

இந்த நிகழ்ச்சியின் 4ஆவது சீசன்ஆனது தற்போது பிரமாண்டமாக நடைப்பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த வாரத்தின் இறுதியில் நடைபெறவிருக்கும் ஃபைனல் போட்டியில் வெல்லப்போவது யார் என்று பார்க்க தான் பல ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.


அந்தவகையில் இந்த வார இறுதியுடன் முடிவுக்கு வரும் Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை அடுத்து, விஜய் டிவி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீசன் 9 ஆனது பிரமாண்டமாக ஆரம்பமாக இருக்கின்றது.

அதாவது சூப்பர் சிங்கர் சீசன் 9 விரைவில் தொடங்கவுள்ளது என கடந்த வாரம் ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டிருந்தது. அதன்படி Mr. and Mrs, சின்னத்திரை நிகழ்ச்சி முடிந்த பின் அதே நேரத்தில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஒளிப்பரபாக இருக்கிறது. 


மேலும் இந்த வாரத்தின் இறுதிக்குள் சூப்பர் சிங்கர் சீசன் 9 ஒளிப்பரப்பு நேரத்தின் ப்ரோமோ வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் சூப்பர் சிங்கர் ரசிகர்கள் பலரும் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement