• Apr 20 2024

விஜய்யைத் தொடர்ந்து ரஜினியுடனும் கூட்டணி அமைக்கும் பிரபல சூப்பர் ஸ்டார்- ஜெயிலர் படத்தின் வேற லெவல் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘ஜெயிலர்’.பிரபல இளம் இசையமைப்பாளர் இசையமைக்கும் இப்படத்தில்  ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், வசந்த் ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் படக்குழு வெளியிடவில்லை.இப்படத்தின் படப்பிடிப்பு 65% நிறைவடைந்த நிலையில் பொங்கலுக்குப் பிறகு, மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.


 ஏப்ரல் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்தபடக்குழு திட்டமிட்டு வருவதாகவும்அந்த விழாவிலேயே படத்தின் டீசரையும் வெளியிடுகின்றனர் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் கேமியோ பன்ன உள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு வரும் 8-ம் தேதி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகின்றது.


மேலும் மோகன்லால் இதற்கு முதல் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.















Advertisement

Advertisement

Advertisement