மறுபடியும் கொரோனா எனும் கொடிய நோயால் மற்றுமொரு இயக்குநர் மரணம்..!

340

அப்பு வெங்கடேஷ் நடித்த ஒன்டே படம் மூலம் கன்னட திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் நவீன். அந்த படம் கடந்த 2011ம் ஆண்டு ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மாண்டியாவை சேர்ந்த நவீனுக்கு கொவிட் 19 பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். 36 வயது நவீன் இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இறப்பதற்கான வயதா இது? கொடிய கொரோனா இவரையும் விட்டு வைக்கவிலலையா என பல பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது.

மேலும் நவீனின் உடல் அவரின் சொந்த ஊரான மாண்டியாவில் தகனம் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டில் கன்னட திரையலகில் இது மூன்றாவது மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு தமிழ் திரையுலகில் கடந்த வாரம் மட்டும் 4 நாட்களில் இயக்குநர்கள் தாமிரா, கே.வி. ஆனந்த் ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனைத் தொடர்ந்து அடுத்து உதயநிதியும் முன்னிலையில்
  5. வயிற்றில் குழந்தையுடன் ‘முக்காலா முக்காபிலா’பாடலிற்கு நடனமாடிக்கலக்கும் சாண்டியின் மனைவி!

சமூக ஊடகங்களில்: