• Apr 20 2024

பிரபல பாடகர் முன்னாடி... சுமாராகப் பாட்டுப் பாடிய அனிதா சம்பத்... வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் பிரபல செய்தி வாசிப்பாளர்களில் ஒருவராகப் பணியாற்றி பின்பு சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். தனது சிறு வயதில் இருந்தி செய்தி வாசிப்பாளராக புகழ்பெற்றுள்ள இவர் தமிழ் சினிமா திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 


அதுமட்டுமல்லாது குறிப்பாக திரைப்படங்களில் செய்து வாசிப்பவராக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்தவகையில் 'காலா, காப்பான், 2.0, ஆதித்ய வர்மா, தர்பார், டேனி' என பல படங்களில் செய்தி வாசிப்பாளராகவும் ஒரு சில முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.


இவ்வாறாக தனது தொழிலில் கவனம் செலுத்தி வந்த அனிதா சம்பத் பிரபா என்பவரை 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அனிதா 2020-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராகப் பங்குபெற்றுள்ளார். 


இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மென்மேலும் பிரபலமானார். இந்நிலையில் அனிதா பாடிய பாடல் ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். மேலும் அப்பதிவில் "இந்த பாட்டை தான் நான் hometour இல் பாடியிருப்பேன். கார்ல ஓடுற default song. ஒரு வர்ஷமா நானும் பிரபாவும் loopல கேட்டுட்டு இருக்கோம்.being couple fans for stephen zechariah…நேற்று அவரது chennai concertல அவரை சந்திக்க முடிஞ்சிது. அங்க நடந்த சம்பவம் தான் இது,

ரொம்ப சுமாரா பாடியிருந்தாலும் எங்களோட ரொம்ப ரொம்ப favourite பாட்டை fan girl ஆக original singer முன்னாடி பாடுனது நிஜமாவே பெரிய கோல்டன் மொமெண்ட் தான்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அதனை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement