தெலுங்கில் பாடகராகும் அனிருத்தின் இசைப்பயணம்

170

அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிய சில ஆண்டுகளில் திரையுலக பிரபலங்களையும், தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தனது இசையின் மூலம் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

இவரின் திரைப்பயணத்தில் இவர் பிலிம்பேர், விஜய் தொலைக்காட்சி விருது, எடிசன் விருது என பல விருதுகளை இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் பல விருதுகளை பெற்று புகழ்பெற்றுள்ளார்.

தமிழில் என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைக்கும் அனிருத், தெலுங்கிலும் நானி, ரவிதேஜா நடித்த படங்களுக்கு இசையமைத்துள்ளார். என்றாலும் அந்த படங்களின் பாடல்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் கீரவாணி இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் அனிருத்.

இந்நிலையில் அந்த பாடல் ஆகஸ்ட் 1-ந்தேதியான வெளியாகிறது. அதையடுத்து மகேஷ்பாபு நடித்து வரும் சர்காரு வாரி பாட்டா என்ற படத்திற்காகவும் தமன் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார் அனிருத். இந்த பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.