• Apr 19 2024

கோலிவுட்டுக்கு ரெஸ்ட் விட்டு திடீரென பாலிவுட் பக்கம் தாவிய அனிருத்...அதுவும் எந்த படத்துக்கு தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அனிருத் ரவிச்சந்திரன் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். மேலும் இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார்.


மேலும் இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும்.  இந்த 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் அனிருத்.


இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.


இந்நிலையில் கோலிவுட்டில் அஜித், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துள்ள அனிருத், தற்போது திடீரென பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.


தற்போது இவர் கைவசம் அஜித்தின் 62-வது படம், ரஜினியின் ஜெயிலர், கமல் - ஷங்கர் கூட்டணியில் தயாராகும் இந்தியன் 2, விஜய்யின் தளபதி 67 என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் அனைத்தையும் தற்போது அனிருத் வசம் தான் உள்ளன.


ல் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஷாருக்கானின் ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார் அனிருத். அதுமட்டுமல்லாமல் ஜவான் படம் தான் அவர் இசையமைக்கும் முதல் முழுநீள இந்தி திரைப்படம் ஆகும்.

Advertisement

Advertisement

Advertisement