• Apr 25 2024

''ஜவான்'' படத்தில் சொதப்பிய அனிருத்…செம கடுப்பில் அட்லீ.! ஓஹோ....இதான் சம்பவமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான். இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, பிரியாமணி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ர் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு படம் சில காரணங்களால் அக்டோபர் மாதம் வெளியாகும் என தகவல்கள் பரவியது.

இதனையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல காரணம் என்னவென்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  அதன்படி இந்த படத்தின் பின்னணி இசை பணிகளை முடிக்க சிறிது காலம் வேண்டும் என அனிருத் கூறியுள்ளாராம்.ஏனென்றால், அவர் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இதன் காரணமாகவே ஜவான் படத்தின் இசை பணியை முடிக்க சிறிய காலம் வேண்டும் என்பதற்காக அனிருத் அட்லீயிடம் கொஞ்சம் நாள் கேட்டுள்ளாராம். மேலும் அனிருத் தற்போது லியோ, இந்தியன் 2, NTR 30 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement