ஜந்து தமிழ்த்திரைப்படங்கள் இன்று மட்டும் ரிலீஸ்- செம குஷியான ரசிகர்கள்

127

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்தது. அந்த வகையில் தற்பொழுது பல திரைப்படங்கள் ஓடிடி தளத்திலும் திரையரங்கங்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் இன்று ஒரே நாளில் 5 திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதை அடுத்து தமிழ் திரையுலகம் மீண்டும் சுறுசுறுப்பாகி உள்ளது. அந்த வகையில் இன்று ரியோ நடித்த பிளான் பண்ணி பண்ணனும், ராய் லட்சுமி நடித்த சின்ட்ரெல்லா, ஈஸ்வர் கொற்றவை இயக்கிய சூ மந்திரகாளி, யோகி பாபு நடித்த பேய்மாமா மற்றும் முற்றிலும் புதுமுகங்கள் நடித்த சின்னஞ்சிறு கிளியே ஆகிய 5 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இதில் ரியோ நடித்த பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியோ ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராய் லட்சுமி நடித்த சின்ட்ரெல்லா, திரைப்படம் திகில் கதையம்சம் கொண்டது என்பது ஏற்கனவே டிரெய்லரில் இருந்து தெரிய வந்துள்ளது. இந்த படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி மற்றும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள பேய்மாமா படத்தில் யோகிபாபு மட்டும் மொட்டை ராஜேந்திரன் காமெடி சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதும் குறிப்பிடத்தக்கதாகும்.