• Apr 20 2024

நடிகை ஐஸ்வர்யாவுக்கு இது முக்கியமான படம்- கிரேட் கிச்சன் திரைப்படம் குறித்து அசீம் கொடுத்த பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு Neestream ஓடிடியில் வெளியான திரைப்படம் "The Great Indian Kitchen". விமர்சகர்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற  இப்படத்தை ஜியோ பேபி எழுதி இயக்கினார்.நிமிஷா சஜயன் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டிஜோ அகஸ்டின், ஜோமோன் ஜேக்கப், விஷ்ணு ராஜன், சஜின் S ராஜ் ஆகியோர் தயாரித்தனர்.

கேரளாவில் ஆசிரியராக வேலை செய்யும் சூரஜ், நடன ஆசிரியராக இருக்கும் நிமிஷாவை திருமணம் செய்கிறார். திருமணத்துக்கு பின்னர் நிமிஷாவுக்கு காலையில் எழுந்ததும் குடும்பத்துக்கு உணவு தயாரிப்பது, பாத்திரங்களை சுத்தம் செய்வது, மதிய உணவு தயாரிப்பது, மதிய உணவுக்கு பின் பாத்திரங்களை சுத்தம் செய்வது, பிறகு சமையல் அறையில் இரவு உணவுக்குப்பின் சுத்தம் செய்வது பின்னிரவில் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கை. தினமும் இதே சம்பவங்கள், அதனால் ஏற்படும் பெரும் சலிப்பு. இந்த வாழ்க்கை மீது சலிப்பு ஏற்படும்போது அந்த பெண் என்ன முடிவை எடுக்கிறார் என்பதும் தான் படத்தின் கதை.


தமிழில் இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் R. கண்ணன் இயக்கத்தில் தயாராகி உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடித்துள்ளார் ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் சிறப்புக் காட்சி நேற்று முன்தினம் திரையிடப்பட்டது.இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அசீம் கலந்து கொண்டு படத்தினை கண்டு களித்துள்ளார். படம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து அசீம் தமது கருத்துக்களை முன் வைத்தார்.


படம் குறித்து பேசிய அசீம், " தி கிரேட் இந்தியன் கிச்சன், ஒரு வார்த்தையில் சொல்லனும் என்றால் One Women Show. ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல படங்கள் பண்ணிருக்காங்க. இது அவங்களுக்கு முக்கியமான படம். ஆணும் பெண்ணும் சமம்னு சொல்றோம். எத்தனை பேர் இதை செயல்படுத்துறாங்கனு தெரியாது.

தென் தமிழகத்தில் பல இடங்களில் திருமணத்திற்கு பிறகு பெண்கள் அவங்க கனவுகள் ஆசைகளை துறந்து சமைக்கிறது மட்டும் தான் வேலையா இருக்கும் என்று சொல்றாங்க. இதை வாய் வழியாக சொல்வதை தாண்டி திரை வடிவத்தில் கொண்டு வருவது பெரிய விஷயம். இயக்குநர் கண்ணன் அதை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு அருமையாக தரமாக இருந்தது. தாய்மார்கள் தாண்டி கணவன்மார்களும், கணவன் ஆகப்போறவங்களும் பார்க்க வேண்டிய படம்" என அசீம் பேசினார்.


Advertisement

Advertisement

Advertisement