• Apr 23 2024

'வாரிசு' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்…வைரலாகும் புகைப்படம்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கில் பிரபலமான திரைப்பட இயக்குநர்களில் ஒருவர் வம்சி. இவர் தமிழ் சினிமாவிலும் 'தோழா' என்ற படத்தின் மூலமாக காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து பல படங்களை தமிழிலும், தெலுங்கிலும் இயக்கி வந்த வம்சி தற்போது குடும்ப சென்டிமென்ட் கதையான 'வாரிசு' படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் கதாநாயகனாக தளபதி நடித்திருக்கின்றார். மேலும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் உடைய டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே விஜய்யின் படங்களுக்கு மாஸாகவே தலைப்பிடுவார்கள். இதனால் ரசிகர்களுக்கு 'வாரிசு' என்ற தலைப்பு பிடித்திருக்கவில்லை. எனினும் இப்படம் சற்று எமோஷனலான கதையம்சம் கொண்ட படமாக படமாக உருவாகி இருப்பதனால் தான் இப்படத்திற்கு 'வாரிசு' என பெயரிட்டிருப்பதாக படைத்தரப்பு சார்ந்தோர் கூறியிருந்தார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்யோடு இணைந்து அவரிற்கு ஜோடியாக ராஷ்மிகாவும், மற்றும் சரத்குமார், பிரபு, ஷ்யாம், பிரகாஷ் எனப் பலரும் நடிக்கின்றனர். இதில் விஜய்க்கு தந்தையாக சரத்குமாரும், விஜய்யின் சகோதரராக ஷ்யாமும் நடித்திருக்கின்றார்கள். அத்தோடு இப்படத்தினுடைய அடுத்தகட்ட படப்பிடிப்புக்கள் ஹைதராபாத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு சாதாரண மக்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்திருந்தனர். நடிகர் சரத்குமார் 'வாரிசு' படப்பிடிப்பில் படக்குழுவினரோடு இருந்திருக்கின்றார். இதனால் அவருடைய பிறந்தநாளை 'வாரிசு' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து படக்குழுவினர் கொண்டாடியிருக்கின்றனர். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தற்போது செம வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement