• Mar 25 2023

ஆவேசமடையும் ரித்திகா சிங்... இவர்களுக்கு தண்டனை இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை...

ammu / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகை ரித்திகா சிங் இன் கார் திரைப்பட நிகழ்வில் கலந்து கொண்டார். அவரை ரசிகர்கள் பலவாறு கேள்வி கேட்டனர். அதில் ஒருவர் படத்தில் "எது பண்ணுவதாக இருந்தாலும் காரிற்குள் வைத்து பண்ணுங்கள்" என்று அந்த நால்வரிடமும் கூறியதை பற்றிய கருத்தை கேட்டார்.


அதற்கு ரித்திகா "இந்த படத்தில் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் அப்படியானது, அதற்கு தகுந்தாற்போல் நான் நடித்தேன் என்று கூறினார்.


மேலும் அவர் கூறுகையில், இப்படி பல இடங்களில், பலவாறு நடக்கிறது. நான் ட்விட்டர் பக்கம் போனாலே ஆத்திரமாக வருகிறது, 8 வயது சிறுமி, 15 வயது சிறுமி பாலியல் தொல்லை என்று பல தகவல்கள் காணக்கூடியதாக இருக்கிறது.


இப்படி செய்பவர்களை என்ன செய்யலாம்? இவர்களை தண்டித்தாலும் இப்படி பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்று கூறினார். மேலும் இப்படி செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று ரித்திகாவை கேட்டார்கள்.


அதற்கு அவர் இப்படி செய்பவர்களுக்கு எப்படி பட்ட தண்டனை கொடுத்தாலும் தீராது. பெரும் மோசமான தண்டனை கொடுக்க வேண்டும், இவர்களுக்கான தண்டனை இன்னுமே கண்டுபிடிக்கவில்லை என்று கடும் கோவத்தோடு கூறினார். 


Advertisement

Advertisement

Advertisement