• Sep 27 2023

வெற்றியின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்'... சந்தோஷத்தில் ஜனனி வெளியிட்ட மங்களகரமான புகைப்படம்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.


இதற்கு முக்கிய காரணமே இந்த சீரியலினுடைய கதை தான். பெண் அடிமைத்தனத்தை மையமாக கொண்டு இந்த சீரியலை இயக்கியதன் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றார் இயக்குநர் திருச்செல்வம்.


இந்த சீரியலினுடைய இயக்குநராக மட்டுமன்றி ஒரு நடிகராகவும் நடித்துள்ளார். அதாவது இதில் ஜீவானந்தம் என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இந்த சீரியலானது தற்போது 500எபிசோடுகளை வெற்றிகரமாகத் தொட்டுள்ளது. இதனையடுத்து சக்தியும், ஜனனியும் வேஷ்ட்டி, சேலையில் கோவிலுக்கு சென்றுள்ளனர்.


அதுமட்டுமல்லாது ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுமிதா இந்த சந்தோசமான விடயத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் பகிர்ந்துள்ளார். 


அத்தோடு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் தான் முன்னிலையில் உள்ளது. இந்த சீரியல் குழுமத்தினரின் வெற்றிகரமான முயற்சிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   


Advertisement

Advertisement

Advertisement