• Apr 25 2024

ரச்சிதா பத்தி பேசும்போது விக்ரம் சொன்னதை கேட்டுட்டு அமுதவாணன் கூறிய கருத்து..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் இருந்தது. மேலும் இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.

எனினும் இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது. இப்படியான சுவாரஸ்யமான சம்பவங்களால் பிக்பாஸ் வீடு நிறைந்துகொண்டிருக்கிறது. இவ்வாறுஇருக்கையில் கார்டன் பகுதியில் அமுதவாணன், விக்ரமன், ADK ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அப்போது அமுது,"சைக்கிள் டாஸ்க்-ல ரச்சிதா கடைசி வரைக்கும் ஓட்டணும்னு முயற்சி பண்ணாங்க. பெரிய விஷயம் அதெல்லாம்" என்கிறார். அதற்கு விக்ரமன்," ஆண், பெண் அப்படியெல்லாம் இல்ல, முயற்சி பண்ணா யாரு வேண்டுமானாலும் ஓட்டலாம்" என பதில் அளிக்கிறார். தொடர்ந்து பேசும் அமுதவாணன்,"அப்படி சொல்லல. அவங்களுக்கு கால்ல அடி பட்டுருந்துச்சு. பொதுவா ஆண்கள் அதிகமா சைக்கிள் ஒட்டி தான் பார்த்திருக்கோம். எங்காவது பெண்கள் சாரி கட்டிக்கிட்டு ரொம்ப தூரம் ஓட்டுவாங்களா? அதாவது அவங்களுக்கு பிராக்டீஸ் இருக்காதுன்னு சொல்றேன். உடனே என்கிட்ட வந்துடுவியே. ஊர்மேல போற மாரியாத்தா-ங்குற கதையா இருக்கே. அந்த விஷயத்தையே விடுங்க" என சிரித்தபடியே சொல்கிறார்.

அப்போது, "பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த முதல் வாரமே ADK கிட்ட அதான் சொன்னேன். அத்தோடு ஆண், பெண்-னு பிரிவினை பேசக்கூடாதுன்னு" என்கிறார் விக்ரம். அதற்கு பதில் அளித்த அமுது,"நான் அவங்களை பெருமையா சொன்னேன்" என்கிறார்.



Advertisement

Advertisement

Advertisement