• Mar 27 2023

மணக்கோலத்தில் எழிலைப் பார்த்த அமிர்தா- விறுவிறுப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ

stella / 1 month ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. கோபி பாக்கியாவைப் விட்டுப் பிரிந்து ராதிகாவைத் திருமணம் செய்திருந்தாலும் பாக்கியாவுக்கு எதிராகப் பல வேலைகளை செய்து வருகின்றார்.

இப்படியான நிலையில் தன்னுடைய வீட்டிற்கு எழில் பாக்கியாவின் பெயர்ப்பலகையை வைதது விட்டதால் வீட்டை விற்கப் போகின்றேன் எனக் கூறியதால் எழில் அந்த வீட்டை எப்படியாவது வாங்கியே தீருவேன் என்று சபதம் போட்டார். இருப்பினும் எழிலால் வீட்டை வாங்க முடியவில்லை.


இதனால் ஈஸ்வரி காலில் விழுந்து கெஞ்சியதால் வர்சினியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்து விட்டார். இதனால் எழிலுக்கு நிச்சயதார்த்தம் அவசரம் அவசரமாக நடைபெறுகின்றது. இப்படியான ஒரு நிலையில் எழில் வர்சினியின் நிச்சயதார்த்த விழாவிற்கு அமிர்தா வருகை தந்திருக்கின்றார்.

அத்தோடு எழிலை மணமகனாக பார்த்ததினால் அதிர்ச்சியடைந்துள்ளார்.இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் எழில் யாரைத் திரும் செய்யப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாக இருப்பதையும் காணலாம்.
















Advertisement

Advertisement

Advertisement