கொரோனாத் தொற்றால் அவதியுறும் அசுரன் பட அம்மு அபிராமி

84

தமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகளில் ஒருவர் தான் அம்மு அபிராமி. இவர் ராட்சசன் மற்றும் அசுரன் போன்ற படங்களில் நடித்தவர். இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நடிகை அம்மு அபிராமி இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டார் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது என்று கூறப்படுகின்றது.

மேலும் இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்த நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையை அடுத்து பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் என்னை நானே தனிமை படுத்திக்கொண்டேன்.

மேலும் மருத்துவரின் பரிந்துரையின்படி மருந்துகளை எடுத்து வருகிறேன். முன்பை விட வலிமையாக மீண்டும் குணமாகி திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், அதிக கவனமாக இருங்கள்’ என்று கூறியுள்ளார். இதனால் அம்மு அபிராமி விரைவில் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. விரைவில் ஒன்றாகச் சந்திக்கவுள்ள குக்வித் கோமாளி பிரபலங்கள் என்ன நிகழ்ச்சியில் தெரியுமா?
  5. மறுபடியும் கொரோனா எனும் கொடிய நோயால் மற்றுமொரு இயக்குநர் மரணம்..!

சமூக ஊடகங்களில்: