“அம்மா எங்கள பார்த்தா ட்வின்ஸ் மாதிரி இருக்குல்ல”- கண்ணம்மாவின் சந்தேகத்தை அதிகரித்த லக்ஷ்மி

289

தமிழில் முன்னணித் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தற்பொழுது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருப்பதோடு கண்ணம்மாவிற்கு தனக்கு இரட்டைக் குழந்தை பிறந்த விடயம் தெரிந்ததோடு அந்த மற்றக் குழந்தை யாரென்பதை அறிய அவள் போராடி வருவதும் தெரிந்ததே

அந்த வகையில் இன்றைய எப்பிஷோட்டில் ஒளிபரப்பவுள்ளது என்னவென்றால்.

கண்ணாவிடம் லக்ஷமி விளையாட எனக்கு ப்ரண்ட்ஸ் இல்லயே என வருத்தமாக சொல்லிக்கொண்டிருக்கும் போது அங்கு ஹேமா வருகிறாள் .ஹேமாவைப் பார்த்ததும் லட்சுமி சந்தோஷப்படுகிறாள். பின்னர் ஹேமா வாங்கி வந்த டிரஸ்ஸை லட்சுமியிடம் கொடுத்து, இரண்டு பேருக்கும் அப்பா ஒரே மாதிரி டிரஸ் வாங்கி கொடுத்திருப்பதாக சொல்கிறாள். குழந்தைகள் இருவரும் டிரஸ் மாத்திக் கொள்ள செல்ல, அகிலிடம் இன்னொரு குழந்தை பற்றிய விஷயத்தைக் கேட்கிறாள் கண்ணம்மா. எனக்கு எதுவும் தெரியாது என தடுமாறியவாறே பதில் சொல்கிறான் அகில். உடனே கண்ணம்மா உண்மையில் ஹேமா யாரு என கேட்க, தத்து எடுத்த பொண்ணுதான் என்கிறான் அகில்.

மேலும் அடுத்து குழந்தைகள் இருவரும் ஒரே மாதிரி டிரஸ் அணிந்து வர, கண்ணம்மாவின் சந்தேகம் அதிகரிக்கிறது. அப்போது லட்சுமியும் எங்கள பார்த்த ட்வின்ஸ் மாதிரி இருக்குல்ல என்கிறாள். அப்போது ஹேமா, சமையல் அம்மானு சொல்லாமல், அம்மானு சொல்ற என கேட்க, கண்ணம்மா லட்சுமி என் சொந்த பொண்ணுதான் என்கிறாள். அப்புறம் ஏன் அப்படி சொல்ல சொன்னீங்க என கேட்க, அவளோட படிப்புக்காக தான் அப்படி செஞ்சேன் என்கிறாள். பின்னர் குழந்தைகள் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். ஹேமாவை பார்க்கும் போதெல்லாம் கண்ணம்மாவின் சந்தேகம் அதிகரிக்கிறது.

அப்போது,லக்ஷியைப்பார்த்து சமையல் அம்மானு என்கிட்ட பொய் சொல்லிட்ட என்கிறாள் ஹேமா. டாக்டர் அங்கிள் எங்க அம்மா மேல் கோபமாக இருக்குறதால் தான் பொய் சொன்னேன் என்கிறாள் லட்சுமி. பின்னர் அகிலும் ஹேமாவும் கிளம்ப, ஹேமாவை பிரிய முடியாமல் தவிக்கிறாள் கண்ணம்மா.அடுத்ததாக, சோகமாக இருக்கும் அஞ்சலியிடம், என்ன பிரச்சனை என சௌந்தர்யா கேட்க, ஒண்ணுமில்லை என சமாளிக்கிறாள். பின்னர் சௌந்தர்யா அஞ்சலிக்கு அட்வைஸ் செய்கிறாள்.

அதன்பின் உனக்கு விருப்பம்னா கண்ணம்மா வீட்டில் போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வா என சௌந்தர்யா சொல்கிறாள். மேலும் நாம எல்லாரும் ஒண்ணா வாழணும் என்றும் சொல்கிறாள்.அடுத்ததாக, ஹேமாவை ஏன் கண்ணம்மா வீட்டுக்கு போக வேண்டாம்னு தடுத்த என வேணு கேட்க, கண்ணம்மாவுக்கு இப்ப சந்தேகம் வந்திருச்சு, ஹேமாவ பார்த்த அவ எப்படி நடந்துக்குவா என்று தெரியல அதான் போக வேண்டாம்னு சொன்னேன் என்கிறாள் சௌந்தர்யா. ஆனால் பாரதி ஏன் போகச் சொன்னான் என வேணு கேட்க, அவன விடுங்க என்கிறாள் சௌந்தர்யா.

அப்போது அங்கு வருகிறார்கள் ஹேமாவும் அகிலும். பின்னர் ஹேமா போட்டோ எடுத்ததை எல்லாம் சௌந்தர்யாவிடம் காட்டினாள். அதன்பின் ஹேமா, லட்சுமி கண்ணம்மாவோட பொண்ணு என்று சொல்ல, அதிர்ச்சியாகும் சௌந்தர்யா எப்படி என கேட்க, அங்கு நடந்ததை சொல்கிறாள் ஹேமா. பின்னர் ஹேமா தூங்க போன பின், ஹேமா லட்சுமியோட அப்பா பத்தி கேட்டா, நான் எதுவும் சொல்லலை என்கிறான் அகில் . மேலும், கண்ணம்மா ஹேமாவை ஒரு மாதிரி பார்க்குறாங்க என்று சொல்ல, கொஞ்ச நாளைக்கு ஹேமாவ அங்க போக விடக்கூடாது என்கிறாள் சௌந்தர்யா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.