• Apr 25 2024

காவலாளிகளைத் தாண்டி.. 4வயது சிறுவன் செய்த செயல்... திகைத்துப் போன அமிதாப்பச்சன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் நடித்த 'உஞ்சை' என்ற திரைப்படம் ஆனது தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

அதுமட்டுமல்லாது மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. மேலும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து அனுபம் கெர், நீனா குப்தா, போமன் இரானி போன்ற நடிகர்களும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் தீவிர ரசிகனாக உள்ள 4 வயதே ஆன ஒரு சிறுவன் ஒருவன் அவரது பங்களாவிற்கு வெளியே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த நபர்களை தாண்டி சென்று அவரது காலில் விழுந்து வணங்கிய சம்பவத்தை அமிதாப் பச்சன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

அதாவது அமிதாப் பச்சனின் ரசிகர்கள் வயது வித்தியாசமின்றி எல்லா வயதினரிடையேயும் காணப்படுகிறார்கள். இவருடைய படங்கள் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் ரொம்பவே பிடிக்கும். அத்தோடு குழந்தைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'பூத்நாத்' போன்ற ஒரு சில படங்களிலும் அமிதாப் பச்சன் பணியாற்றியுள்ளார். 


அமிதாப் பச்சனைப் பொறுத்தவரையில் இவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவரது பங்களாவுக்கு வெளியே தனது ரசிகர்களை நேரில் சந்தித்து வருவார். இதனால் இவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் இங்கு வருகிறார்கள். இந்த நிலையில் தன்னை பாதித்த சம்பவத்தை அமிதாப் பச்சன் சமூக வலைதளத்தில் தற்போது பகிர்ந்துள்ளார். 


அதாவது அந்தச் சிறுவன் அமிதாப் பச்சனை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். அதுமட்டுமல்லாது அவன் தன் கையில் வைத்திருந்த ஓவியத்தை அவரிடம் காண்பித்து ஆட்டோகிராப் வாங்கி சென்றான். அவரை காண இந்தூரிலிருந்து அந்த சிறுவன் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இது போன்ற சம்பவங்கள் அனைத்தும் தன்னை நெகிழ வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமிதாப்பச்சன் கூறுகையில் "இந்த 4 வயது குழந்தை டான் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நேராக இந்தூரில் இருந்து என்னைச் சந்திக்க வந்தது. என்னைச் சந்திக்க வேண்டும் என்ற அவனது பழைய ஆசை நிறைவேறியதும், என் காலில் அழுது வணங்கினார். ஆனால் சுற்றிவளைப்பை உடைத்துக்கொண்டு ஓடி வந்த பிறகு, நான் அவனுக்கு நிறைய ஆறுதல் கூறினேன்" எனத் தெரிவித்திருக்கின்றார். 

அத்தோடு "அவன் வரைந்திருந்த என்னுடைய ஓவியங்களில் கையெழுத்திட்டேன், மேலும் அவனது தந்தையின் கடிதத்தையும் எனக்கு வாசித்து காண்பித்தான். என்னுடைய நலம் விரும்பிகளின் உணர்வுகள் இப்படித்தான் இருக்கும். இதைப் பார்த்து நான் தனிமையில் இருக்கும் போது 'இதெல்லாம் எதற்கு? எப்படி? எப்பொழுது?..' என என்னை நானே கேட்பேன்" என்று அமிதாப் பச்சன் மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement