• Mar 28 2024

"ஓடிப்போலாமா..?"... தன்னோட ஜோடியை பார்த்துக் கேட்ட பாவனி.. போட்டு வாங்கிய அமீர்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான நபர்களாக இருந்து வருபவர்கள் பாவனி-அமீர் ஜோடி. இவர்கள் விஜய் டீவியின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் தமக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கின்றார்கள்.


இதில் பாவனி ஆரம்பத்தில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது விஜய் டீவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த 'பிபி ஜோடிகள் 2' நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் பலரும் பல விதமாக கூறி இருந்தார்கள். 


அதேபோல் அமீரும் ஒவ்வொரு எபிசோடும் பாவனிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். மேலும் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வின் டைட்டில் வின்னர் அமீர்- பாவனி தான்.


இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அதில் ஆங்கராக மாறிய அமீர் பாவனியிடம் பல கேள்விகளைக் கேட்டிருந்தார். அதுமட்டுமல்லாது கிண்டலாக "எல்லாமே வெளிய வரப்போகுது. எல்லோருமே பார்த்திட்டு இருக்காங்க" எனவும் அமீர் பாவனியை பார்த்து சிரிச்சுக்கிட்டே கூறியிருந்தார். 


அந்த வகையில் அமீர் "பிக்பாஸ் வீட்டுக்குள்ள என்னை பார்த்ததும் முதல்ல என்ன நினைச்சீங்க? எனப் பாவனியிடம் கேட்டார்.  அதற்கு "எனக்கு ஒருபிரெண்ட் வந்துடடா என்று நினச்சேன்" என்றார் பாவனி.

அத்தோடு பாவனி பேசுகையில் "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அப்புறமாக வெளிய வந்ததும் என் பமிலி, அந்தப் பையன் ஓட இனிமேல் நீ பேச கூடாது, டான்ஸ் ஆடக் கூடாது என்று எல்லாம் சொன்னாங்க. இப்போ அதை எல்லாம் தாண்டி இப்பிடி சேர்ந்து உட்கார்ந்து பான்ஸ் ஐ எல்லாம் மீற் பண்ணும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கு" எனக் கூறியிருந்தார்.


அடுத்து "பிக்பாஸ் வீட்டுக்குள்ள எனக்கு மட்டும் எதுக்கு சாப்பாடு ஊட்டல" என்று கேட்டாரு அமீர். அதற்கு பாவனி "ரொம்ப நெகடிவ்வாக தோணிச்சு அதானால தான்" என்றார். உடனே அதற்கு அமீர் "அப்போவே எனக்கு தெரியும் நீங்க எங்கிட்ட விழுந்திடீங்க, மனசில எதுவும் இல்லாட்டில் எனக்கும் ஊட்டி விட்டிருப்பீங்க" என்றார்.   

தொடர்ந்து பேசுகையில் உங்களோட மிகப் பெரிய டெஸர்ஸ் ஐ எங்கிட்ட ஷேர் பண்ணனும் என்றால் என்ன கேட்பீங்க என்கிறார். அதற்கு உடனே பாவனி "ஓடிப்போலாமா" எனக் கேட்டார். மேலும் அமீரைப் பார்த்து "உங்க பிசிக்ஸ் நல்லா இருக்கும்" எனவும் கூறினார்.  


அத்தோடு "பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும் போது என்னை உங்களுக்கு பிடிக்கலையா" எனக் கேட்டார் அமீர். அதற்கு உடனே பாவனி "கொஞ்சம் கொஞ்சம் பிடிக்கும்" என்றார். அதற்கு உடனே "பிக்பாஸ் வீட்டுக்குள்ள அவங்களுக்கு என்னை பிடிச்சிருந்திருக்கு. நான் அவங்கள டிஸ்டப் பண்ணல" என அமீர் கூறினார்.

இவர்களின் இந்த கியூட்டான நேர்காணலானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement