• Mar 25 2023

அந்த விஷயத்தில் விஜய்யை ஓவர்டேக் செய்த அல்லு அர்ஜுன்...ஷாக்கான ரசிகர்கள்!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.சுகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் 2023 இறுதிக்குள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி பட புகழ் சந்தீப் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அல்லு அர்ஜுன்.

இந்நிலையில், அல்லு அர்ஜுன் முதன்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதாகவும், அதற்கு அவர் வாங்கும் சம்பளம் பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் ராக் ஸ்டாராக கலக்கி வரும் அல்லு அர்ஜுன், தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க ரெடியாகிவிட்டாராம். அவரது நடிப்பில் 2021 இறுதியில் ரிலீஸான புஷ்பா திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தியா முழுவதும் ரிலீஸான புஷ்பா, பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிக்கும் மேல் வசூலித்தது. 

. இந்நிலையில், முதன்முறையாக பாலிவுட்டிலும் நடிக்க உள்ளாராம் அல்லு அர்ஜுன். பூஷன் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜுன் 125 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா 2 ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஆயிரம் கோடி ரூபாய் வரை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் ஒரு படத்திற்காக 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அல்லு அர்ஜுன்  கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் விஜய்யை ஓவர்டேக் செய்துவிட்டதாக தெரிகிறது. விஜய் தற்போது 110 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார். இதன்மூலம் தென்னிந்திய நட்சத்திரங்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Advertisement

Advertisement

Advertisement