• Sep 30 2024

மனைவியின் பிறந்தநாளில் வித்தியாசமான சர்ப்ரைஸ் கொடுத்த அல்லு அர்ஜுன்- சூப்பர் கிப்ட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  டிசம்பர் 17 ஆம் நாள் வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இப்படத்தில் இவருடன் இணைந்து அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 


மலையாள நடிகர் பஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகின்றது.இந்நிலையில் அல்லு அர்ஜூன் தனது மனைவி சினேகா ரெட்டியின் பிறந்தநாளை பஞ்சாப்பில் கொண்டாடினார்.


 பிரபல நட்சத்திர விடுதியில் கேக் வெட்டிக் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். பின்னர் குடும்பத்துடன் அமிர்தசரஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற பொற்கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று அங்கு பல்வேறு சடங்குகளில் பங்கெடுத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 


மேலும் வாகா எல்லையில் உள்ள புகழ்பெற்ற எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தேசிய கொடி அவிழ்க்கும் நிகழ்வை குடும்பத்துடன் கண்டுகளித்தார். மேலும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். இது குறித்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement