• Mar 23 2023

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட முத்தழகு சீரியல் நடிகை- காதல் ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


வெள்ளித்திரையில் உள்ள பிரபலங்கள் காதலித்து திருமண பந்தத்தில் இணைவது போல சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்களும் காதல் திருமணம் புரிந்து வருகினன்றனர்.

அந்த வகையில் யூடியூப் சேனல்களில் வெப் சீரியல்களில் நடிப்பதன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை சம்யுக்தா. இவர் நிறைமாத நிலவே வா என்னும் வெப் சீரியலில் நடித்திருந்தார். இதனை அடுத்தே சீரியலில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.


தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாவம் கணேசன் சீரியல் நடித்திருந்தார். இதனை அடுத்து தற்பொழுது முத்தழகு சீரியலில் நடித்து வருகின்றார்.சம்யுக்தா சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் என்பவரைக் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முதல் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் தற்பொழுது இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதனால் சீரியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement