• Jun 03 2023

திடீரென மனோபலா உடலருகில் அலைமோதிய மக்கள்...குவிந்த கமெராக்கள்..இது தான் காரணமா..?

Aishu / 4 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் மனோபாலா இன்று  திடீரென காலமானார். கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் மரணம் அடைந்தார். அவருக்கு தற்போது 69 வயது ஆகிறது.

திரையுலகில்  நடிகராக 700 படங்களுக்கு மேல் நடித்துள்ள மனோபாலா 24 படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் இதில் சிவாஜியின் பாரம்பரியம், ரஜினியின் ஊர்க்காவலன் போன்ற படங்களும் அடங்கும். எனினும் இதுதவிர சதுரங்க வேட்டை உள்பட சில பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும் மனோபாலா தயாரித்துள்ளார்.



மனோபாலா நடிப்பில் ஏராளமான படங்களும் உருவாகி வருகின்றன.அத்தோடு  அதில் ஒரு படம் தான் நடிகர் விஜய்யின் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மனோபாலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். 


இந்நிலையில் தற்போது மனேபாலாவின் உடலுக்கு நடிகர் விஜய் நேரடியாக அஞ்சலி செலுத்தி உள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.அத்தோடு திடீரென விஜய் வந்ததால் பல மக்களும் அங்கு அதிகம் கூடிய நிலையில் பல கமெராக்கள் குவிந்தன.அத்தோடு இவரின் உடலுக்கு ஆரியா, கவுண்டமணி, ராதாரவி,கே.எஸ்.ரவிக்குமார்,எச் வினோத் என பலரும் நேரடியாக அஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


நாளை காலை 10.30 இற்கு மனோ பாலாவின் உடல் எடுத்து சென்று இறுதிக்கிரியைகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement