• Apr 01 2023

ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கார் விருது பெற்றது பற்றி எதுவும் சொல்லாத ஆல்யா பட்- இது தான் காரணமா?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். இப்படத்தில் ராம் சரண் ஜுனியர் என்ட்ரியார் அஜய் தேவகிருஷ்ணா ஆலியா பட் என நட்சத்திரப்பட்டாளமே நடித்து உள்ளது.இதில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ளார். 

அவருக்கு மிக அதிகமான காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் படத்தில் வாம்மா மின்னல் போன்ற கதாபாத்திரத்தை ராஜமெளலி வைத்தது ஆலியா பட்டை ரொம்பவே அப்செட் ஆக்கியது. ப்ரோமோஷன்களுக்கு கூட வருவதை தவிர்த்து விட்டார் ஆலியா பட்.


ஆலியா பட்டின் கணவர் ரன்பீர் கபூர் மற்றும் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான Tu Jhoothi Main Makkaar படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வரும் நிலையில், நேற்று அந்த படத்துக்கு மட்டும் ஆலியா பட் வாழ்த்து சொல்லி விட்டு ஆஸ்கர் வென்ற ஆர்ஆர்ஆர் படம் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாதது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.


ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரம் படத்தின் தென்னிந்திய ப்ரோமோஷனுக்கு மட்டும் இயக்குநர் ராஜமெளலி தேவை. ஆனால், அவர் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் வென்ற நிலையில், ஒரு வாழ்த்து கூட சொல்ல மாட்டீங்களா என ஆலியா பட்டை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். ஆஸ்கர் மேடையில் ஆர்ஆர்ஆர் படத்தை பெருமையாக பேசிய தீபிகா படுகோனை ரசிகர்கள் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement