• Mar 28 2023

30வது பிறந்த நாளை சூப்பராகக் கொண்டாடும் ஆலியா பட்- வைரலாகும் புகைப்படங்கள்

stella / 1 week ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தனது நீண்ட நாள் காதலனான நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டார். 


இந்த ஜோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஹா என்கிற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது குழந்தையை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருதால், நடிகை ஆலியா பட் சில மாதங்களுக்கு சினிமாவைவிட்டு ஒதுங்கியே இருந்து வருகிறார்.


இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் ஆல்யா பட் இன்றைய தினம் தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். 


இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இவரின் பிறந்த நாள் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement