• Apr 25 2024

ஜெயம் ரவி மிரட்டும் 'அகிலன்' திரைவிமர்சனம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் 'அகிலன்'. இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், தன்யா ராஜேந்திரன், ஜிராக் ஜானி, தருண் அரோரா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள்ளனர். அத்தோடு இத்திரைப்படத்தை, பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் தான் இயக்கியுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள இப்படத்தினுடைய திரை விமர்சனத்தை பார்க்கலாம்.


கதைக்கரு 

அந்தவகையில் ஹார்பரில் முறைகேடாக நடக்கும் அனைத்து கடத்தல்களுக்கும் நங்கூரமாய் இருக்கிறான் அகிலன் என்ற ஜெயம் ரவி. இவை அனைத்திற்கும் தலைவனாக கபூர் என்பவன் இருக்கின்றான். அவனை எப்படியாவது சந்திக்க வேண்டும் என முடிவெடுக்கின்றான் அகிலன். இதனையடுத்து அவனை சந்திக்க, பல நாடுகளின் உளவு ரகசியங்களை வைத்திருக்கும் ஒருவனை நாடு கடத்தும் அசைமெண்ட் அவனிடம் கொடுக்கப்படுகிறது. 

ஆனால் இதற்கிடையே எதிர்பாராத விதமாக அகிலனின் ஆட்டத்தை அடக்க நினைக்கும் போலீஸ் அதிகாரி பல்வேறு முயற்சிகளை செய்து அகிலனை கைது செய்ய நினைக்கிறான். இறுதியில் அகிலன் அந்த அசைமெண்டை பக்காவாய் பிளான் பண்ணி முடித்தானா? அதற்கு பின்னால் அவன் வைத்திருக்கும் மாஸ்டர் பிளான் என்ன? அகிலனை அடக்க நினைத்த அதிகாரிக்கும், அவனுக்கும் இடையேயான முட்டல், மோதல், சண்டை எங்கு போய் முடிந்தது? என்பதே படத்தின் மீதிக் கதை. 


நிறைகள் 

படத்தின் லொக்கேஷன் அனைத்துமே ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கிறது. அந்தவகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹார்பர், கடல், கப்பல் என முழுக்க முழுக்க கடற்கரையும், அதனை சார்ந்த இடங்களிலும் காட்சிகள் அமைந்து இருந்தது புது வித அனுபவமாக இருக்கின்றது.

மேலும் அகிலனாக ஜெயரவியின் அலட்டி கொள்ளாத நடிப்பு அற்புதம். அவர் அச்சு அசல் கதாபாத்திரமாகவே ஒன்றிவிட்டார். கேள்வி எழுப்ப முடியாத அளவிற்கு படத்தில் அவ்வளவு டீடெய்லிங். அதனால் கதை இன்னதென்று உடனே ரசிகர்களால் கணிக்க முடிய வில்லை என்றாலும் படத்தின் திரைக்கதை நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைத்து விடுகிறது. 

அதேபோல் சாம் சி.எஸ் பின்னணி இசை பிரமாதமாக இருக்கின்றது. கதையோடு கலக்கிறது.

குறைகள் 

படத்தில் பலவீனம் என்று பார்த்தால் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனாலும் டூயட், ரொமான்ஸ் என்று எதிர்பார்த்து வந்தால், அதற்கு கொஞ்சமும் வாய்ப்பில்லை. அதனாலேயே என்னவோ பிரியா பவானி ஷங்கருக்கு பெரிதாக அந்தப் படத்தில் வேலையில்லை. அவருக்கே வேலையில்லாத போது, தன்யா ராஜேந்திரனுக்கு மட்டும் வேலையா இருக்கப் போகிறது. அது சொல்லவே தேவையில்லை.

தொகுப்பு 

எது எவ்வாறாயினும் அருள்மொழி வர்மனுக்கு அடுத்த ஹிட் தான் இந்த 'அகிலன்' என்று கூட கூறலாம், அந்த அளவில் தான் இப்படத்தின் உடைய திரைக்கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement