• Apr 18 2024

கோலிவுட்டை மிரள வைக்க போகும் 220 கோடி பட்ஜெட்டில் ‘AK62’.! வெளியானது சூப்பர்ஹிட் தகவல்.!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் அஜித் ‘துணிவு’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் அஜித்துடன் அரவிந்த் சாமி, சந்தானம், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக முன்பே  தகவல்கள் பரவியது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே , ஒரு புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.   என்னவென்றால், AK62 படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். இந்த திரைப்படம் தரமான ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

அதுமட்டுமன்றி இந்த திரைப்படத்திற்கே இசையமைப்பாளர் அருண்ராஜ் சேமிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படம் கிட்டத்தட்ட 220 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜித் கேரியரில் இந்த திரைப்படம் தான் மிகப்பெரிய பட்ஜெட் என்றும் கூறுகிறார்கள்.எனவே 220 கோடி பட்ஜெட் படம் என்றால் கண்டிப்பாக படம் கோலிவுட்டை மிரட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக சொல்லபப்டுகிறது.





Advertisement

Advertisement

Advertisement