• Apr 24 2024

வெளியானது 'AK 62' படத்தின் தலைப்பு... இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள 'ஏ.கே. 62' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளையொட்டி இன்று இரவு அல்லது நாளை  வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் இந்த படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து தீயாக பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும் நாளை உறுதியாகிவிடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


இருப்பினும் பொதுவாக அஜித்தின் படங்களினுடைய தலைப்பு வி என்ற எழுத்தில் தொடங்கும் என்பதால் விடாமுயற்சி என்ற தலைப்பிற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement