• Apr 20 2024

உனக்கு இது தேவையா என கேட்ட அஜீத் மனைவி ஷாலினி: அதிகாலையில் அழுத மாதவன்: நடந்தது என்ன?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷாலினி நடிப்பில் வெளிவந்த திரைப்படமான அலைபாயுதே என்றே திரைப்படத்தை 90-ஸ் கிட்டால் மறக்கவே முடியாது.

அந்த வகையில் அலைபாயுதே திரைப்படத்தில் இடம்பெற்ற சுவாரஸ்ய சம்பவம் தொடர்பில் மாதவன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

குறித்த திரைப்படத்தில் ஷாலினியுடன் தான் இணைந்து பேசுவதுபோல் வரும் காட்சி படம் ஆக்கப்படும் போது அது சிங்கிள் டேக் ஆக எடுக்க பிளான் போட்டார் மணி சேர், அப்போது புயல் அடிக்குது மழை பெய்கிறது நான் ஷாலினி அருகே செல்கிறேன் திடீரென கட் கட் என்று நான் சொல்லிடடேன்.


எல்லோரும் பார்க்கிறாங்க உடனே மணி சேர் கட் சொல்லிட்டு கிட்ட வந்து என்ன என்று என்னிடம் கேட்க்கிறார், நான் சொன்னேன் சேர் இந்த சீன்ல நீங்க அழச்சொல்லுறீங்க அழுதாள் நல்லா இருக்காது சிரித்துக்கொண்டு பண்ணினாள் நல்லாயிருக்கும் என்று சொல்லுறேன், அவருக்கு கண் எல்லாம் சிவந்துவிட்டது உதவி இயக்குனர்கள், தூரத்தத்தில் யாரோ பிழையாக நின்றார் அவருக்கு என எல்லோருக்கும் பேச்சு விழுது அவர் கோபத்தில் நிற்கும் போது என் வாயில் நல்லதா ஏதும் வரல திரும்ப சொல்லுறேன், நீங்கதான் இயக்குனர் நீங்க சொல்லுறமாதிரியே நடிக்கிறேன் என்று சொல்ல இன்னும் டென்ஷன் ஆகிட்டார். 

நீ சொல்லித்தான் நான் இயக்குனர் என்று தெரிஞ்சிக்கணுமா என்று கேட்டார், நான் சத்தம் போடாமல் நடிக்க போய்ட்டேன் ஷாலினி உனக்கு இது தேவையா என்று கேட்டார்.  

தொடர்ந்து 3.30 மணிக்கு எல்லாம் சூட்டிங் முடிஞ்சுது, வழக்கமாக சூரியன் போகும் மட்டும் படப்பிடிப்பு நடத்துபவர் நேரத்தோடு முடித்து விட்டார், போச்சு நம்ம இந்த படத்தில் இல்லை என்று நினைத்துகொண்டு ஹோட்டல் போறேன் அப்பத்தான் நான் திருமணம் செய்த புதுசு மனைவி ஓடி வந்து கட்டிப்பிடித்து எப்படி சூட்டிங் போச்சு என்று கேட்டா நான் மொத்தமா போச்சு என்றேன். 

என்னை தூக்கிட்டாங்கள் அடுத்த நாள் வீட்டுக்கு போறதுக்கு நான் ரெடி, பிறகு call வருகிறது நாளை அதிகாலை சூட்டிங் என்று நான் என்ன சொல்லுறீங்க நாளைக்கு சூட்டிங்கா என்று ஆச்சரியத்துடன் கேட்டேன் அதற்கு மணி சேரின் உதவி இயக்குனர் சொன்னார் என்ன சேர் திரும்ப திரும்ப கேட்க்கிறீங்க என்று சரியென்று போனை வைத்துவிட்டு படுத்திட்டேன்.

மறுநாள் எழுந்து ஹோட்டல் கீழே வருகின்றேன் மணி சேர் நின்றார் நான் Sorry சொன்னேன் அதற்கு அவர் திரும்ப என்னிடம் sorry சொன்னார் நீ சொன்னதுதான் சரி என்றார்.

இப்படியே சினிமா பற்றி சிந்தித்துக்கொண்டே  இரு,  அப்படி சிந்தித்ததால்தான் இப்படி எல்லாம் உனக்கு தோன்றுகிறது என்று சொன்னார் நான் அழுதுவிட்டேன் என்றார் மாதவன்.

Advertisement

Advertisement

Advertisement