• Dec 01 2023

அஜித்தின் சில்லா பாடல் இளம் ஹுரோவின் பாடலின் காப்பியா- இணையத்தில் ட்ரெண்டாகும் ட்ரோல்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் எச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் துணிவு. இப்படம் 1987ல் நடந்த பஞ்சாப் வங்கிக் கொள்ளையை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் கதையை அஜித்திடம் ஒன் லைனில் கூறியதுமே நடிக்க சம்மதித்து விட்டதாக எச் வினோத் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடல் டிசம்பர் 9ந் தேதி வெளியாகும் என போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். 


அஜித்தின் சில்லா சில்லா பாடலுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில்,நேற்று சோஷியல் மீடியாவில் சில்லா சில்லா பாடலின் 10 செகண்ட் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இணையத்தில் திருட்டு தனமாக சில நொடிகள் வெளியாகி இருக்கும் இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், இணையத்தில் வெளியாகி உள்ள 10 செகண்ட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த பாடல் காப்பி என்ற புது சர்ச்சையை கிளப்பி உள்ளனர். அதாவது சில்லா சில்லா பாடல், சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தில் வரும் ஜலபுல ஜங் பாடல் போல இருப்பதாக ட்ரோல் செய்து வருகின்றனர். 10 செகண்ட் வீடியோவைப் பார்த்து அதுக்குள்ள காப்பி என்று சொல்வதா என அஜித் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement