• Jun 04 2023

வேல்ட் டூரை முடித்த அஜித் தனது குடும்பத்துடன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்- வேற லெவலில் இருக்கே

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் அடுத்தாக நடிக்கவுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இயக்குநர் மகிழ்திமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இப்படத்தில் அஜித் நடிப்பதற்காக 105 கோடி ரூபாய் சம்பளமாக பெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மகிழ் திருமேனி சொன்ன ஒன்லைனை மட்டும் கேட்டுவிட்டு அஜித் தனது வேல்ட் டூருக்கு கிளம்பிவிட்டார். இப்போது தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் அஜித். விரைவில் மகிழ் திருமேனியிடம் முழு கதையையும் கேட்கவிருப்பதாக கூறப்படுகிறது.


 அதன் பிறகு ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் அவர் தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் செய்யவிருக்கிறார்.விடாமுயற்சி ஷூட்டிங் மே 22ஆம் தேதி தொடங்கவிருப்பதாக தெரிகிறது. பூஜையுடன் தொடங்கும் படப்பிடிப்பில் முதலில் அஜித்தின் போர்ஷனை முடித்துவிட மகிழ் திருமேனி திட்டமிட்டிருக்கிறாராம்.

 அஜித்தும் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இயக்குநர் இப்போது லொகேஷன் தேடும் பணியில் தனது டீமுடன் ரொம்பவே பிஸியாக இருக்கிறார்.


இதற்கிடையே படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய், கங்கனா ரணாவத், கத்ரீனா கைஃப், கரீனா கபூர் ஆகியோரிடமும், தமிழிலிருந்து த்ரிஷாவிடமும் பேச்சுவார்த்தை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


இந்த நிலையில் அஜித்தின் புதிய போட்டோஸ் வெளியாகியுள்ளன. அதில் அஜித் தனது குடும்பத்துடன் ரசிகர்களைச் சந்தித்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement