• Feb 04 2023

முக்கிய இடத்தில் நாளுக்கு நாள் அதிகமாகும் அஜித்தின் 'துணிவு' பட ப்ரீ புக்கிங்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Listen News!
Prema / 1 month ago
image

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் தற்போது 'துணிவு' திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இப்படமானது வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் வித்தியாசமான கதையம்சத்துடன் கூடியதாக அமைந்திருக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோகேன், பிரேம், வீரா, சிபி சந்திரன், அமீர், பாவனி, ஜிபி முத்து என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தியுள்ளனர்.


பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியில் ஒரு நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லை என அஜித் கூறி இருந்தாலும், இப்படத்தை வாங்கி வெளியிடும் நிறுவனங்கள் புரமோஷன் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றன. 


மேலும் இப்படமானது வங்கி கொள்ளை பற்றிய சம்பவத்தை பேசுகிறது என்பது படத்தின் டிரைலர் வந்ததும் தெளிவாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக டிரைலரில் அஜித்தின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளார்கள், அத்தோடு கண்டிப்பாக படம் தாறுமாறாக இருக்கும் எப்போது படம் ரிலீஸ் ஆகும் என இப்போதே அந்த ரிலீஸ் நாளை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் அஜித்தின் துணிவு படம் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருகிறது. அதன்படி UKவில் படத்திற்கான புக்கிங் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது இப்போது வரை அங்கு செய்யப்பட்டிருக்கும் புக்கிங் விவரம்  இதோ,


Advertisement

Advertisement

Advertisement