• Dec 04 2023

பல ஆண்டுகளாக சீரியஸாக நடித்து வந்த அஜித்... தற்போது எடுத்த அதிரடி முடிவு... ஏற்றுக்கொள்வார்களா ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நாயகனாக விளங்கி வருபவர் அஜித். இவர் தற்போது வினோத்தின் இயக்கத்தில் 'துணிவு' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடிப்பில் ஏற்கெனவே உருவான 'வலிமை' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் துணிவு திரைப்படம் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையில் அஜித் இருக்கின்றார்.

இப்படத்தின் உடைய படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமான நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அத்தோடு இப்படமானது வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.

அஜித் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை காண மிகவும் ஆவலாக இருக்கும் இந்த நேரத்தில் அஜித் தன் அடுத்த பட வேலைகளை விரைவில் தொடங்கவிருக்கின்றார். அந்தவகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள 'AK62' திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜனவரி இறுதியில் தொடங்கும் எனக் கூறப்படுகின்றது.


மேலும் லைக்கா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். அஜித் பல ஆண்டுகளாக தொடர்ந்து சீரியஸான கதையம்சம் கொண்ட படங்களிலேயே நடித்து வருவதால் ஒரு பீல் குட் படத்தில் நடிக்க அஜித் முடிவெடுத்துள்ளாராம். இதன் காரணமாகத் தான் விக்னேஷ் சிவனின் கதையை அஜித் ஓகே செய்ததாக பேசி வருகின்றனர். 


இந்நிலையில் அஜித்தை கடந்த பல வருடங்களாக சீரியஸான படங்களில் பார்த்து ரசித்த அவரது ரசிகர்கள் அவர் பீல் குட் படத்தில் நடித்தால் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. இருப்பினும் எந்தவித தயக்கமுமின்றி அஜித் துணிந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement