• Apr 19 2024

ரஜனியின் பார்முலாவைப் போஃலோ பண்ணும் அஜித்- அடடே இந்தப் படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளார்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வித்தியாசமான கதையம்சங்களைக் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த வருகின்றது. இது தவிர பல பழைய படங்கள் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு வெளியிடப்பட்டும் வருகின்றது.இப்படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரீ-ரிலீஸின் போது அமோக வரவேற்பை பெற்றன. தற்போது ரஜினி நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான பாபா திரைப்படம் ரீ-ரிலீசுக்கு தயாராகி வருகிறது.


ரஜினியின் மனதுக்கு நெருக்கமான படமாக இப்படத்தை  நவீன தொழில்நுட்பத்துக்கு மாற்றி ரீ-ரிலீஸ் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இப்படத்திற்கு ரஜினி தான் கதை திரைக்கதை எழுதியிருந்தார்.சமீபத்தில் இப்படத்திற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டது. 

 இப்படத்தை ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தற்போது இதே பார்முலாவை நடிகர் அஜித்தும் பின்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு ரிலீசாகி படுதோல்வி அடைந்த ஆழ்வார் படத்தை தான் தற்போது ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். 


சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் கட்டா குஸ்தி திரைப்படத்தை இயக்கிய செல்லா அய்யாவு தான் ஆழ்வார் படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement