• Feb 03 2023

மீண்டும் மோதலில் இறங்கும் அஜித் விஜய்-தீபாவளி பண்டிகையில் ரசிகர்களுக்கு காத்திக்கும் சர்ப்ரைஸ்-இது லிஸ்ட்லயே இல்லையே..!

Listen News!
stella / 2 weeks ago
image

Advertisement

Listen News!

சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படமும் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியானது. கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகின. அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்தே இப்படங்கள் இரண்டும் வெளியாகியதால் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 இது தவிர பல இடங்களில் மோதல்கள், திரையரங்கங்கள் சேதம் என விரும்பத்தகாத விஷயங்கள் பல நடந்தன. குறிப்பாக ரசிகர் ஒருவர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.இந்நிலையில் இவ்விரு படங்களும் தற்போது வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது.என்னதான் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரு படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இரண்டு படங்களும் வெற்றி படங்களாகவே அமைந்துள்ளன.


 ஆனாலும் ரசிகர்களின் மோதல்கள் இன்னமும் குறைந்த மாதிரி தெரியவில்லை.தற்போது எந்த படம் வசூலில் அதிகம் என பேசி சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக அஜித் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 படத்தில் நடிக்கவுள்ளார். அதே சமயம் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகின்றார்.


இவ்விரு படங்களும் ஒரே சமயத்தில் துவங்கியுள்ளதால் ரசிகர்கள் சிலர் மீண்டும் அஜித் மற்றும் விஜய் படங்கள் மோதும் வாய்ப்பு இருப்பதாக பேசி வருகின்றனர். குறிப்பாக இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்விரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் தளபதி 67 திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையின் போது வெளியாகும் என பேசப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement