• Apr 20 2024

விஜய்யின் மாமியார் வீட்டு ஏரியாவில் மாஸ் காட்டும் அஜித்.. இதுவரை செய்யாத வசூல் சாதனையை செய்த துணிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் தான் 'துணிவு'. இப்படமானது ஜனவரி 11-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இப்படமானது வெளியான நாள் முதலே சிறந்த விமர்சனங்களை பெற்று வருகின்றது. 


இதனால் பொங்கல் விடுமுறை முடிந்து, வார நாட்களில் கூட துணிவு படத்தின் வசூல் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான்  தற்போது துணிவு படம் மற்றொரு சாதனையை படைத்திருக்கிறது. அதாவது தளபதி விஜய்யின் மாமியார் வீடு இருக்கும் இங்கிலாந்தில் அஜித் குமாரின் துணிவு படம் 300,000 பவுண்டு வசூல் செய்திருக்கின்றது. 


இவ்வாறாக இங்கிலாந்தில் அஜித் படம் இவ்வளவு வசூல் செய்தது இதுவே முதல் முறையாகும். இந்த புது சாதனை குறித்து அறிந்த அஜித் ரசிகர்களோ மிகுந்த குஷியில் இருப்பதோடு 'தல போல வருமா'  என பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது துணிவு படம் செய்த இரண்டாவது சாதனை என்றே கூற வேண்டும்.


அதுமட்டுமல்லாது வட அமெரிக்காவில் துணிவு படம் 1 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. அஜித் படம் ஒன்று அதுவும் வட அமெரிக்காவில் 1 மில்லியன் டாலரை கடந்தது என்றால் அது இதுவே முதல் முறையாகும். 


இவ்வாறு அமெரிக்கா, இங்கிலாந்து மட்டும் அல்லாமல் அரபு நாடுகளிலும் துணிவு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியாவிலும் தாறுமாறாக வசூல் வேட்டையினை துணிவு படம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement