• Mar 25 2023

இயக்குநர் ஷங்கரின் 4 படத்தை நிராகரித்த அஜித்...அதுவும் இந்த படங்களா..?

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநராக திகழ்பவர் தான் ஷங்கர்.இவர் இயக்கும் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருகின்றது.

அந்தவகையில்  இவர் இயக்கத்தில் தற்போது இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

கமல் ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் ராம் சரணை வைத்து RC 15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.அத்தோடு  இந்த இரு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்கள் ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி மற்றும் எந்திரன். அத்தோடு இந்த படங்களை தவிர்த்தும் பல ஹிட் படங்களை ஷங்கர் கொடுத்துள்ளார்.

ஆனால், இந்த 4 படங்களில் மட்டும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், இந்த 4 படத்திலும் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் அஜித் தானாம்.

ஆம், அஜித்திற்காக தான் இந்த 4 படங்களின் கதையும் உருவானதாம். ஆனால், அஜித் ஒவ்வொரு படத்திற்கும் வெவ்வேறு காரணங்களை கூறி ஷங்கரிடம் இருந்து தனக்கு கிடைத்த 4 படங்களின் வாய்ப்பையும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

அத்தோடு இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யார் பாலு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement