• Dec 04 2023

அஜித் சேர் டீ போட்டுக் கொடுத்தாரு விஜய் சேர் சுடுவது நல்லா இருக்கும்- பிரபல வில்லன் நடிகர் கூறிய சுவாரஸியமான விடயம்

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இரு முக்கிய நட்சத்திரங்களாக விளங்கும் நடிகர் அஜித் நடிப்பில் துணிவு என்னும் திரைப்படமும் விஜய் நடிப்பில் வாரிசு என்னும் திரைப்படமும் உருவாகி வருகின்றது. இப்படங்கள் இரண்டுமே அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதனால் இருவரின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல சேனலில் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் பிரத்யேக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். இதில், பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு அஜித் மற்றும் விஜய் ஆகியோர் குறித்து பல சுவாரஸ்ய கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். அதில் பெசன்ட் ரவி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.


நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் குறித்து பேசிக் கொள்வார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பெசன்ட் ரவி, "ரெண்டு பேருக்கும் உள்ள அவ்ளோ புரிதல் இருக்கு. ஷாலினி மேடமும் சங்கீதாவும் பயங்கர க்ளோஸ். வெளிய இருந்து பார்க்கும் போது அப்படியே போயிட்டுருக்கு. ரசிகர்கள் ஒரு இமேஜ் கொண்டு வந்துட்டாங்க" என தெரிவித்தார்.

அதே போல, நடிகர் விஜய்யுடன் நடித்த மறக்க முடியாத திரைப்பட காட்சி அல்லது வசனம் பற்றி பேசிய பெசன்ட் ரவி, போக்கிரி படத்தை குறிப்பிட்டு, "யார்றா இங்க தமிழ்ன்னு கூப்பிட்டு சட்டையை புடிச்சு நான் இழுத்துட்டு போவேன். அதுக்கு அப்புறம் அவரு துப்பாக்கியை எடுத்து சுடுற சீன் சூப்பரா இருக்கும்" என பெசன்ட் ரவி தெரிவித்தார்.


அதே போல நடிகர் அஜித் குறித்து பேசி இருந்த பெசன்ட் ரவி, "நான் அஜித் சார்ன்னு கூப்பிட்டுட்டு இருந்தேன். அஜித்ன்னு கூப்பிட சொல்லுவாரு. இவ்ளோ வளர்ந்தும் அஜித்ன்னு கூப்பிட சொல்லுவாரு. அது எல்லாம் எங்களுக்கு கிடைச்ச கிஃப்ட்ன்னு தான் சொல்லணும்.

ஒரு தடவ அஜித் சார் கேரவனும், என் கேரவனும் பக்கத்துல பக்கத்துல நின்னுட்டு இருந்திச்சு. அப்போ என் கேரவன்ல கோளாறு ஏற்பட்டு கரெண்ட் எல்லாம் போய்டுச்சு. அவர் கேரவன்ல கரெண்ட் இருந்துச்சு. என்னை அவரு கேரவன்ல கூப்பிட்டு அவரு சேர்ல உக்கார வெச்சு ரவிக்கு அங்கே மேக்கப் போடுங்கன்னு சொல்லுவாரு. அந்த டைம்ல டீ குடுத்தாரு. மேக்கப் போட்டு நான் குடிக்குறதுக்குள்ள டீ ஆறிடுச்சு. அப்போ இன்னொரு டீ போட்டு குடுத்தாரு. அந்த அளவுக்கு ஒரு தங்கம். ரெண்டும் (அஜித், விஜய்) தங்கம் தான்" என மனம் நெகிழ்ந்து போய் பெர்சன்ட் ரவி குறிப்பிட்டுள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement