• Jun 04 2023

"கண்ட நாயெல்லாம் எனக்கு...." அட்வைஸ் கொடுத்த பிரபலத்தை... வார்த்தையாலே அசிங்கப்படுத்திய அஜித்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் குமாருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அஜித் குறித்த பல சுவாரஷ்ய விடயங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் அஜித் எப்போதுமே அமைதியானவர், எந்த பிரச்சனைக்கும் போகமாட்டார் என்பது தான் நமக்குத் தெரிந்தது. ஆனால் அஜித் தனது இள வயதில் துடினமான ஒருவராகவும், எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசக் கூடிய ஒருவராகவும் இருந்திருக்கின்றார். 


அதாவது அஜித் தனது சினிமாவில் ஆரம்பகட்டத்தில் வேறு விதமாக தான் இருந்திருக்கிறார். பேட்டிகளில் கூட தான் நினைப்பதை ஓப்பனாக பேசி பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கியும் வந்திருக்கின்றார். 

இந்நிலையில் அவ்வாறு அஜித் ஒரு பிரபலத்தை மோசமாக திட்டிய சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது. அதாவது "அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ் என செல்வதை விட்டுவிட்டு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அல்லது சினிமாவை விட்டு விட வேண்டும்" என பிரபல தயாரிப்பாளர் கேயார் ஒருமுறை அஜித்திற்கு அட்வைஸ் கொடுத்தாராம்.


இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டியில் பேசிய அஜித் "கண்ட நாயெல்லாம் அட்வைஸ் செய்ய தேவை இல்லை" என கூறி இருக்கிறார். ஒருகாலத்தில் இப்படி இருந்த அஜித் தான் தற்போது மொத்தமாக மாறி இருக்கிறார் என்பது ஆச்சரியப்படக்கூடிய ஒரு விடயம் தான்.

Advertisement

Advertisement

Advertisement