• Apr 25 2024

பைக் டூர் பிஸியிலும் சமையலிலும் பிஸியாக இருக்கும் அஜித்- வைரலாகும் போட்டோஸ்

stella / 11 months ago

Advertisement

Listen News!


சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர் வந்து திரையுலகில் நிலைப்பதே கடினம். அப்படி பின்னணி இருந்தும் சினிமாவுக்குள் வந்து காணாமல் போன ஹீரோக்களை கோடம்பாக்கம் நிறையவே பார்த்திருக்கிறது. ஆனால் அஜித்தோ யாரின் தயவும் இல்லாமல் திரையுலகுக்குள் வந்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் மிகவும் அடிபட்ட அஜித் தான் பட்ட அடிகளை படிகளாக மாற்றிக்கொண்டு முன்னேறியவர்.திரையுலகிற்குள் வந்த புதிதில் அஜித்தை வழிநடத்த யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அவரே கதைகளை கேட்டு தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் சில படங்கள் வெற்றியடைந்தன பல படங்கள் தோல்வியடைந்தன. 


பைக்கில் உலக சுற்றி வரவேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவு. தற்போது தன்னுடைய கனவை நினைவாக்கும் செயலில் தீவிரமாக இறங்கியுள்ளார் அஜித்.இதற்காக, தன்னுடைய உலக சுற்றுலா பயணத்தை, இந்தியாவில் இருந்து தொடங்கிய அஜித், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் பைக்கிலேயே சுற்றி வந்தார். இந்தியாவில் வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்த பின்னர், தன்னுடைய அடுத்த கட்ட பயணத்திற்கு தயாராகிவிட்டார்.


அஜித் அடுத்ததாக, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ள,'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு தாமதமாகியதால், படப்பிடிப்பை முடித்த பின்னர் சுற்றுலா செல்ல திட்டமிட்ட அஜித், அதற்கு முன்னதாகவே தன்னுடைய பயணத்தை துவங்கினார். மேலும் மற்றொரு புறம், அஜித்தின் 'விடாமுயற்சி' படத்திற்கான ப்ரீ புரொடக்சன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.


அந்த வகையில் அஜித் சமீபத்தில் நேபாளம் மற்றும் பூடானுக்கு பைக்கில் பயணம் செய்தார். இந்த சுற்றுப்பயணத்தின் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. அப்போது , ​​அஜித் சமையல் கலையிலும், கலக்கிய ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement