• May 29 2023

ஐஸ்வர்யா வீட்டுக்குச் சென்ற தனம் கொடுத்த அதிர்ச்சி- கண்ணனை ரோட்டில் வைத்து திட்டிய மூர்த்தி- முல்லை எடுத்த முடிவு

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

மீனாவிடம் ஜீவா உங்க அப்பா எனக்கு எதுவும் தெரியாத மாதிரியே பேசிட்டு இருக்காரு எனக் கவலைப்பட மீனா ஜீவாவை சமாதானம் செய்து சாப்பிட அழைத்துச் செல்கின்றார். தொடர்ந்து முல்லை ஐஸ்வர்யா செய்யும் காரியங்கள் குறித்து முல்லையிடம் கோபமாக பேசிட்டு இருக்கிறார்.


அதிலும் ஹாஸ்பிட்டல் செலவுக்கு பணம் கட்டினது வீடியோ பண்ணுறதுக்கு ஐயாயிரம் கேட்டது என அனைத்து விஷயங்களையும் சொல்லித் திட்டுகின்றார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற தனம் கண்ணனைணும் ஐஸ்வர்யாவையும் பார்க்க செல்கின்றார்.

அங்கே கதிர் கிட்ட பணம் வாங்கிய விஷயத்தை சொல்லி கேட்கின்றார். இது தப்பு இல்லையா நீ சம்பாதிக்கிறதானே வேலைக்கு போற தானே எதற்கு கதிர் கிட்ட பணம் கேட்கிற என்று சொல்ல ஐஸ்வர்யா கடனாத் தானே கேட்டோம் திரும்பக் கொடுத்திடுவோம் என்று சொல்ல தனம் இருந்தாலும் நீங்க பண்ணுறது தப்பு என அட்வைஸ்ட் பண்ணிட்டு வருகின்றார்.

வீட்டுக்கு வந்த தனம் முல்லையிடம் கண்ணன் வாங்கிய காசு என்று கொடுக்க முல்லை பணத்திற்காக தான் உங்க கிட்ட சொன்னனா அவங்க பண்ணினது தப்பு அதனால் தான் சொன்னேன் எனக்கு பணம் எதுவும் வேணாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அனைத்தையும் மூர்த்தி கேட்டு விடுகின்றார்.


இதனால் மூர்த்தி எதற்கு பணம் முல்லைக்கு கொடுக்கிறாய் என்று கேட்க முதலில் சமாளிக்கும் தனம் பின்னர் உண்மையைச் சொல்கின்றார். இதனால் கோபமான மூர்த்தி கதிருக்கு எதற்கு தேவையில்லாத வேலை எங்ககிட்ட எதுவும் சொல்லாம ஏன் செய்கிறான் என்று கேட்க முல்லை அதனால் தான் அக்கா கிட்ட சொன்னேன் மாமா எனச் சொல்லி சமாளிக்கின்றார். தொடர்ந்து மூர்த்தி வீதியில் நின்று போன் பேசிட்டு இருக்கும் போது அந்த வழியாக கண்ணன் வருகின்றார்.

கண்ணனைக் கண்ட மூர்த்தி டேய் நில்லடா என்று கூப்பிட்டு உன்னையும் ஐஸ்வர்யாவையும் கொடுமைப்படுத்திறோம். உங்க காசை வாங்கிட்டு இருக்கிறோம் என்று தானே வீட்டை விட போனீங்க, இப்போ உங்களுக்கு அவமானமா இல்லையா எனத் திட்டுகின்றார். இதனால் கண்ணன் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement