• Jun 01 2023

ஐஸ்வர்யாவை கண்டபாட்டுக்குத் திட்டிய அவரின் சித்தி- ஆபிஸர்ஸை வெளுத்து வாங்கிய கதிர்- தயங்கி நின்ற மூர்த்தி

stella / 6 days ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கண்ணன் வீட்டுக்கு கதிர் வருவதைப் பார்த்ததும் கண்ணன் மறைந்து கொள்கின்றார். இதைப் பற்றி எதுவும் கதிர்கிட்ட சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டு உள்ள நிற்க ஐஸ்வர்யாவின் சித்தி நடந்ததைப் பற்றி சொல்கின்றார். கண்ணனுக்கு அடித்ததைப் பற்றி சொல்லவும் கண்ணன் உள்ளே இருந்து வெளியே வந்து ஐஸ்வர்யாவை தப்பா பேசினதால தான் அடிச்சேன் என்று சொல்கின்றார்.


இதனால் கதிர் கண்ணனை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு ஆபிஸர்ஸை தேடிப் போகின்றார். அவர்கள் டி கடையில் டி குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிர் அவர்களிடம் நியாயம் கேட்கின்றார். அவர்களுடன் வாக்குவாதம் முற்றிப்போக அவர்களை கதிர் அடித்தும் விடுகின்றார்.

தொடர்ந்து ஐஸ்வர்யாவின் சித்தி ஐஸ்வர்யாவைத் திட்டுகின்றார். தனிக்குடித்தனம் போகப் போறேன் என்று சொன்ன இதுக்குத் தானா, தனிக்குடித்தனம் வந்து ஒரு 4 மாசம் தான் ஆவுது அதுக்குள்ள இத்தனை லட்சம் கடனா? பேசாமல் அங்க இருந்திருந்தால் அவங்களாவது வளைகாப்பை பண்ணியிருப்பாங்க. உன்னால இப்போ இத்தனை பிரச்சினையில வந்து நிக்குது.


கல்யாணம் பண்ணினதில இருந்து நீ என்ன தான் சரியான முடிவு எடுத்திருக்கிற வளைகாப்புக்கு வாங்கின பணத்தை மட்டும் சரியா தந்திடு என்று திட்டுகின்றார். மறுபுறம் எல்லோரும் ஐஸ்வர்யா வீட்டுக்குச் செல்வதற்காக கிளம்ப மூர்த்தி தான் மட்டும் வர மாட்டேன் என்று சொல்ல எல்லோரும் ஆறுதல்படுத்துகின்றனர்.இருந்தாலும் மூர்த்தி போவதற்கு தயங்குகின்றார் இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.தொடர்ந்து நாளை ஒளிபரப்பாகும் எப்பிஷோட்டில் கதிரைத்தேடி வீட்டுக்க போலீஸார் வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement