• Apr 20 2024

ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அழகில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- விவாகரத்திற்கு பிறகு செம ஸ்டைலிஷாக மாறிவிட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த  2012 ஆம் ஆண்டு 'வெளியான 3 என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்கலவையான விமர்சனங்களுடன், சுமாரான வெற்றி பெற்ற, இந்த திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.


இதைத்தொடர்ந்து, வை ராஜா வை, சினிமா வீரன், போன்ற சில படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய இரண்டு மகன்களை கவனித்து வருவதால் சினிமாவில் இருந்து விலகினார்.இந்நிலையில் கடந்தாண்டு தன்னுடைய கணவர் தனுஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெறுவதாக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே சமூக வலைதளம் மூலம் உறுதிப்படுத்தி இருந்தார்கள்.


இவர்களுடைய மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் சந்தோஷத்திற்காக பள்ளி விழாக்களில் மட்டுமே இருவரும் ஒன்றாக கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.நடிகர் தனுஷை விவாகரத்து செய்த பின்னர், தீவிரமாக உடற்பயிற்சி.. ஆன்மீகம்.. போட்டோ ஷூட்.. மற்றும் லால் சலாம்  படங்களை இயக்கி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜனவரி 1 ஆம் தேதி, நியூ இயர் மற்றும் தன்னுடைய பிறந்தநாளை ஒரே நாளில் கொண்டாடினார்.


பிறந்தநாளிலேயே புத்தாண்டை இவர் வணங்கி வரவேற்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளளார்.  இதில் மிகவும் ஸ்டைலிஷாக இருப்பதுடன், ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அழகில் ஜொலிக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலர் இவரின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement