• Apr 01 2023

தனுஷை கடுப்பேற்ற தான் செல்வராகவனை அழைத்தீங்களா?-புது பிளான் போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


பவர் பாண்டி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் நடிகர் தனுஷ். இவருக்கு எப்படியாவது நடிகரும் தன்னுடைய மாமனாருமான ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் அல்லது அவருடன் நடிக்க வேண்டும் என்பது அவருடைய  நீண்ட நாள் கனவாம்.


ஆனால் ஐஸ்வர்யாவை பிரிந்துவிட்டதால் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு தனுஷுக்கு கிடைக்காது என்று கூறப்படுகின்றது.தொடர்ந்து  ரஜினியை இயக்கும் வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு கிடைத்துவிட்டது.அதன்படி ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி கௌரவ தோற்றத்தில் நடித்து வருகன்றாராம்.


அந்த படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காரைக்குடியில் நடந்து கொண்டிருக்கிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இப் படத்தில் செல்வராகவனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறாராம் ஐஸ்வர்யா. இதற்காக செல்வராகவனை சந்தித்து கதை சொல்லி டேட்ஸ் கேட்க, அன்பு மகள் உனக்கு இல்லாத டேட்ஸா என நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் செல்வராகவன். 


தனுஷ் ஒரு ரஜினி வெறியன் ஆவார். தன் தலைவரின் படத்தில் ஒரு காட்சியிலாவது அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட கால ஆசை. ஆனால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு செல்ராகவனுக்கு கிடைத்திருக்கிறது. செல்வராகவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தனுஷுக்கு எப்பொழுது கிடைக்கும் என்பதே ரசிகர்களின் கேள்வி. லால் சலாம் படத்தில் தன் இரண்டு அப்பாக்களையும் இயக்கும் பாக்கியம் ஐஸ்வர்யாவுக்கு கிடைத்திருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.


Advertisement

Advertisement

Advertisement