• Apr 18 2024

கௌதம் கார்த்திக் - மஞ்சிமாவின் திருமணத்திற்குச் சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- வைரலாகும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கௌதம் கார்த்திக் நடிகர் கார்த்தியின் மகன் ஆவார். கௌதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு ரங்கூன், இவன் தந்திரன் என பல படங்களில் நடித்துள்ளார்.

மஞ்சிமா மோகன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.


கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்துள்ளனர். தேவராட்டம் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.கௌதம், மஞ்சிமா காதலிப்பதாக இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். 


விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் கூறினார்கள்.இந்நிலையில் நவம்பர் 28 ஆம் தேதியான இன்று பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்த நிலையில் இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா இவர்களின் திருமணத்திற்குச் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.







Advertisement

Advertisement

Advertisement