• Apr 25 2024

கணவருடன் விவாகரத்து... மற்றுமோர் முடிவெடுத்த ஐஸ்வர்யா... இதற்கு ரஜினிகாந்தும் உடந்தையாம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

"சூப்பர் ஸ்டாரு யார் என்று கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்.." என்று கூறுமளவிற்கு தமிழ் சினிமாவில் சிறியோர் முதல் பெரியோர் வரை பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒருவரே நடிகர் ரஜினிகாந்த். 


இவருக்கு சினிமாவைத் தாண்டியும் ஒரு அழகான குடும்ப வாழ்க்கை உண்டு. அதிலும் குறிப்பாக இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் ரஜினிகாந்தின் மகள் மட்டுமல்லாது பிரபல தமிழ் சினிமா இயக்குநருமாவார்.

ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோசமாக பல ஆண்டுகளாக நகர்ந்து சென்ற இத்தம்பதியினரின் குடும்ப வாழ்க்கை ஆனது கடந்த சில மாதங்களுக்கு முன் புயல் வீசியது போன்று தடம் புரண்டது. 


அதாவது தனது கணவர் தனுஷிடம் இருந்து பிரிந்து வாழப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் ஐஸ்வர்யா. இந்த பிரிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. எனினும் இருவரும் யாருமே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நிலையில் பிரிந்தும் கொண்டனர். 

இந்நிலையில் விவாகரத்துக்குப்பின் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். ஆம் அது வேறு எதுவுமில்லை. விரைவில் புதிய படம் ஒன்றினை இயக்க போகிறாராம். அதற்கான வேலைகள் யாவும் தற்போது மும்முரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதுமட்டுமல்லாது இன்னொரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் தன்னுடைய மகளின் புதிய படத்திற்கு துணை நிற்கும் வகையில், இப்படத்தில் கவுரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.


அத்தோடு லைக்கா நிறுவனத்தின் உடைய தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப்போகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement